பொழுதுபோக்கு

இனி நாங்கள் கணவன் - மனைவி அல்ல.. மோனிகாவை பிரிந்தார் இசையமைப்பாளர் இமான்..!

மனைவியுடன் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான்.
டி.இமான் - மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. டி.இமான் தனது மனைவியுடன் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன் - மனைவி இல்லை.

எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி" என்று கூறியுள்ளார்.