பொழுதுபோக்கு

சம்பவம் ஆன் தி வே.. "வெந்து தணிந்தது காடு" படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்!!

சிம்பு நடிப்பில் திரைக்கு வர இருக்கும்

Suaif Arsath

"மாநாடு" படத்தின் மிக பெரிய வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து முடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'.. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியுள்ளது. அதன்படி, 'வெந்து தணிந்தது காடு' படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக யூடியூப்பில் வெளியான புதிய டீசர் வீடியோ வியூஸ்களை குவித்து வருகிறது.