பொழுதுபோக்கு

மணப்பெண்ணுக்கு பானிபூரி மாலை, கிரீடம் அணிவித்து மகிழ்வித்த உறவினர்கள்..!

Malaimurasu Seithigal TV

பானிபூரி மாலை அணிவித்த மணப்பெண்ணின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உணவு  என்றாலே அனைவரையும் கவரும் ஒன்றாக தான் இருந்து வருகிறது. அதிலும் சில உணவு பிரியர்கள் உணவுக்காகவே வாழ்கின்றனர் என்று கூட சொல்லலாம். இன்னும் சில பேர் சில உணவுகள் மீது பிரியமாக இருப்பார்கள்  அந்த உணவுகள் எங்கு விற்றாலும் கூச்சமின்றி வாங்கி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில் பிரியாணி, பாஸ்ட் புட் என்ற உணவு வகைகள் முக்கியமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இங்கு ஒரு மணப்பெண் பானிபூரியை விரும்பி சாப்பிடுவார் என்பதற்காக அந்த பெண்ணின் திருமணத்திற்கு அப்பெண்ணுக்கு பானிபூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிவித்துள்ளனர் 

இப்படி பானிபூரி மாலை அணிவிக்கப்பட்ட மணப்பெண்ணின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.