'லா காசா டி பாபெல்' ரசிகர்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் 'மணி ஹெய்ஸ்ட்'. நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி பட்டையை கிளப்பிய தொடர்தான் 'மணி ஹெஸ்ட்'. இந்த தொடரின் உலகளாவிய வெற்றி, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் உற்சாக அலையைத் தூண்டியுள்ளது. தற்போது நெட்ஃபிலிக்ஸ் அதிகாரபூர்வமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த டீசரில் 'புரட்சி ஒருபோதும் முடிவதில்லை' என்ற வாசகங்கள், இந்த தொடரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 'மணி ஹெய்ஸ்ட்' சீசன் 6 அதன் அசல் பழைய கதைக்களத்தின் தொடர்ச்சியா? அல்லது இந்தத் தொடர் அதன் புதிய கதைசொல்லலா அல்லது மாறுபட்ட கதாபாத்திரப் பார்வைகள் மூலம் புதிய படைப்புப் பயணங்களைத் தொடருமா? என்ற பல கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழ செய்துள்ளது.
மேலும், நெட்ஃபிலிக்ஸ், 'மணி ஹெய்ஸ்ட்' உலகை விரிவுபடுத்துவதாகக் கூறுகிறது. புரஃபஸருக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பது யாருக்கும் தெரியாது, ஆனால் அது சீசன் 6-ன் கதை களம் இல்லை என்பதை மட்டும் ஊகிக்க முடிகிறது. மே 10, 2026 அன்று வெளியான டீசரில், இடம்பெற்ற பெரும்பாலான காட்சிகள் 'ராயல் மின்ட்' மற்றும் 'பேங்க் ஆஃப் ஸ்பெயின்' கொள்ளைச் சம்பவங்களை மையப்படுத்தியே உள்ளன. மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டி ஒன்று தோண்டி எடுக்கப்படும் என்ற ஸ்பாய்லருடன் அந்த டீசர் முடிவடைந்தது. இது, இந்தத் தொடரில் அடுத்து என்ன வரக்கூடும்?. மேலும், சீசன் 6-க்கான அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. சீசன் 6 இந்தத் தொடரின் நேரடித் தொடர்ச்சியாக இருந்தால், கதையின் மாஸ்டர் நாயகன் புரஃபசர் கதாபாத்திரத்தில் ஆல்வரோ மோர்டே மீண்டும் நடிக்க வேண்டும் எனத் தொடரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள். பழைய நடிகர்கள் இல்லாவிட்டாலும், "புரட்சியின் உணர்வு" தொடர் முழுவதும் நீடிக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது. ஏனெனில், புதிய நடிகர்கள் முந்தைய சீசன்களில் தொடர் முழுவதும் இருந்த அதே கிளர்ச்சி உணர்வையும், சிக்கலான தனிப்பட்ட உறவுமுறைகளையும் கொண்டு வருகிறார்கள் என்பது புலப்படுகிறது.
வரவிருக்கும் அத்தியாயம் அதன் கதை விவரங்களை இரகசியமாக வைத்திருக்கிறது. சீசன் 2-ல் பெர்லினில் நடந்த “லேடி வித் அன் எர்மைன்” கொள்ளை, இந்த புதிய நிகழ்வுகளுக்கு ஒரு முன்னோடியாக அமைகிறது. 'மணி ஹெய்ஸ்ட்' விரிவாக்கத் தொடர், அதன் கதைக்களத்தை ஸ்பெயினுக்கு அப்பால் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளது, ஏனெனில் தயாரிப்புக் குழு உலகளாவிய டிஜிட்டல் நாணயம் மற்றும் பெரும் அரசியல் சூழல்களை உள்ளடக்கிய உள்ளடக்கத்தை உருவாக்கி வருகிறது. "புரட்சி" என்ற மீண்டும் மீண்டும் வரும் கருப்பொருள், அதிகாரத்தில் உள்ள பலவீனமானவர்கள் எவ்வாறு அதிகார அமைப்புகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதை இந்தப் புதிய தொடர் காட்டும் என்பதைக் குறிக்கிறது. தற்போது இது, மணி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.