பொழுதுபோக்கு

நடிகை சமந்தா நடிக்க மறுத்த கேரக்டரில் ரீஎண்ட்ரி கொடுக்கிறாரா அனுஷ்கா?

நடிகை சமந்தா நடிக்க மறுத்த திரைப்படத்தில் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இந்நிலையில் கன்னடா திரையுலகம்  பிரபல கர்நாடக பாடகி நாகரத்தினம்மா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தபோது  இந்த படத்தில் நடிக்க முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் இந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என சமந்தா கூறிவிட்டதாகவும், இதனையடுத்து இந்த படத்தில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் கன்னடத்தில் தயாரானாலும், தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக அனுஷ்கா ஒதுங்கி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவர் ரீஎண்ட்ரி ஆகியுள்ளது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய தமிழ் படத்தில் அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.