பொழுதுபோக்கு

தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த்

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Malaimurasu Seithigal TV

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய  விருதை   இந்தியாவின் திரைப்பட இயக்குனரகம் வழங்கும். தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்க்கு  தாதா சாகேப் பால்கே விருது  வழங்கப்படுவதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்தவருடம் தேசிய திரைப்படவிழா வரும் 25ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தவிழாவில் நடிகர் ரஜினிக்கு  மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்க இருக்கின்றனர்.

மேலும்  நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், நடிகர் விஜய்சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த அவர், ''மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சி.

நான் விருது பெறும் இந்த நேரத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது. விருது கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

விருது பெறுவதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டார்.