பொழுதுபோக்கு

என்ன நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 47 வருஷம் ஆச்சா...!!

நாடு முழுவதும் நேற்று, 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதே சமயம் நடிகர் ரஜினிகாந்த் திரை துறையில் களமிறங்கி 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையும் சேர்ந்து இரட்டை கொண்டாட்டங்களாக கொண்டாடியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நடிகர் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான இவர், இதுவரை 165 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினியோடு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா என பலர் நடித்திருந்தனர். அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளார். பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்ட ரஜினிகாந்த், கலைமாமணி, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதா சாஹேப் பால்கே விருது போன்ற பல விருதுகளை வென்றவர். 

இந்நிலையில் முதலில் கே.பாலசந்தர் இயக்கத்தில், அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். கமல்ஹாசன், சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, ஜெயசுதா ஆகியோர் நடித்த இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் 1975 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியாகி 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எனவே ரஜினிகாந்த் திரைத்துறையில் கால் பதித்து 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.