பொழுதுபோக்கு

ஜாக்குலின் பெர்ணான்டஸ் துபாய் செல்ல அனுமதி..!

Malaimurasu Seithigal TV

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ், துபாய் செல்வதற்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் 200 கோடி ரூபாய் கையாடல் வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகைகளில் ஒருவர் எனக்கூறி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கலந்துரையாடல் நிகழ்வுக்காக துபாய் செல்ல அவர் மனுத்தாக்கல் செய்திருந்ததையடுத்து அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.