பொழுதுபோக்கு

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்: ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்று அசத்தல்

ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் தான் ஜெய் பீம். 

இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது.

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993ல் நடந்ததாக நிரூபிக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டே ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஜெய் பீம் திரைப்படம் இன்னொரு புறம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

பல்வேறு தடைகளை கடந்து சாதனை படைத்த ஜெய் பீம் படத்திற்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.மொத்தம் 276 திரைப்படம் போட்டிட தகுதி பெற்றுள்ளன. மார்ச் மாதம் 27ஆம் தேதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.