பொழுதுபோக்கு

அப்டேட் அப்டேட்... இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரான ஜெயிலர் படக்குழு!

Malaimurasu Seithigal TV

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததையடுத்து, ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஜுலை 23ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.