பொழுதுபோக்கு

பொதுவெளியில் திரையிடப்பட்ட ஜெய்பீம் திரைப்படம்...ஆர்வமுடம் கண்டுகளித்த பொதுமக்கள்....!

மகாராஷ்டிராவில் பொது வெளியில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் 'ஜெய் பீம்' படம் திரையிடப்பட்டுள்ளது

Malaimurasu Seithigal TV

சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். அதேநேரம் ஜெய்பீம் படத்தின் சில காட்சிகள் சர்ச்சையாகின. மேலும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரால் அடைந்த துன்பம் குறித்து வெட்டவெளிச்சமாக இந்த படம் எடுத்துக் காட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழ் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பொதுவெளியில் 'ஜெய் பீம்' படம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது குறிப்பிடதக்கது.