பொழுதுபோக்கு

"செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல;அவர்களுக்கான உரிய மரியாதை தரப்பட வேண்டும்” - கமலஹாசன்

Tamil Selvi Selvakumar

செய்தியாளர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், தமிழகத்தில் அண்மைக் காலமாக பத்திரிகையாளர்களை சிறுமைப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் அடிக்கடி நிகழ்கிறது என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும், பத்திரிகையாளர்களின் கேள்விகள் தர்மசங்கடம் அளித்தால், அவற்றைத் தவிர்க்கலாமே தவிர, செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல என கேட்டுக் கொண்டுள்ள கமலஹாசன், ஊடகவியலாளர்கள் மரியாதையோடு நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.