பொழுதுபோக்கு

‘ஆலம்விழுது போல “மீனா” நெஞ்சில் நான் இருப்பேனே!’ - கலா மாஸ்டரின் சர்பிரைஸ்!!!

Malaimurasu Seithigal TV

நடிகை மீனாவை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவ்வளவு அழகான நடிகை மற்றும் தனது திறமையால், பல தரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திருழுத்தவர். ‘ரஜினி அங்கிள்’ என தெத்துப் பல்லை வைத்து ரஜினியை எப்படி பாசத்தில் மயக்கினாரோ, அதே போல, இளமை பருவத்திலும், பல லட்ச ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்திழுத்தவர் மீனா.

கொஞ்சும் தமிழ், அழகான சிரிப்பு, மயக்க வைக்கும் மீன் போன்ற விழிகள், திறமையான நடிப்பு மற்றும் அசாதாரண நடனம் என, பல வகையிலும் அவரது திறன், காந்தம் போல இழுத்தது. தமிழ் மட்டுமின்றி பல மொழிகளில், ரஜினி, கமல் தொடங்கி, அஜித் என அனைவருடனும் கதாநாயகியாக நடித்த மீனா, விஜய்க்கு நிகராக படு பயங்கரமான ஆட்டத்தையும் போட்டு தனது கிளாமர் பக்கத்தையும் காட்டினார் மீனா.

90-களின் முன்னணி கதாநாயகியாக இருந்த மீனா, தனது இல்லற வாழ்க்கை துவங்கியதில் இருந்து அதிகமாக சினிமா பக்கம் தலை வைக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது தனது மகள் சினிமா துறையில் நுழந்ததை ஒட்டி, தானும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, ‘த்ரிஷ்யம்’ என்ற படம் மூலம், அவருக்கான வரவேற்பு, உலகளவில் கிடைத்தது என்றே சொல்லலாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா உலகிற்கு மீண்டும் வந்த மீனாவை உடைத்துப் போட்டது அவரது கணவரின் மரணம் தான். பல நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் இறந்தது, அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், நேற்று தனது 46வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு சர்பிரைஸ் தரும் வகையில், அவரது நெருங்கிய தோழியான, நடன இயக்குனர் கலா மாஸ்டர், மீனாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதன் வீடியோவை தனது சோசியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக மிகவும் நெருங்கிய தோழியாகிய கலா மாஸ்டருக்கு, மீனா பல முறை இது போல சர்பிரைஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் 4, கலா மாஸ்டரின் 18வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க, அவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் கலா பூரித்து போனதாக தனது சோசியல் மீடியாக்களில் பதிவிட்ட நிலையில், முதன் முறையாக மீனாவிற்கு கலா இன்ப அதிர்ச்சி கொடுத்ததைப் பார்க்க அழகாக இருந்தது. இந்த வீடியோவிற்கு, ரசிகர்கள் பலரும் தங்களது கமெண்டுகளைப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அந்த பதிவில், கலா எழுதியிருப்பதாவது, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மீனா!! வேறொரு தாயிடமிருந்து கிடைத்த என் சகோதரி நீ. நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் வாழ்க்கை வானத்தை ஏற்றிய பட்டாசுகளைப் போல பிரகாசிக்கட்டும். லவ் யூ.” எனப் பதிவிட்டிருந்தார்.