தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து டி.ராஜேந்தர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, இதயத்தில் இருக்கும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதும், வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பதும் கண்டறியப்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார்.
இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன், டி.ராஜேந்தரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும், நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்ற வாசகத்துடன் அவருடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.