பொழுதுபோக்கு

ஹீரோயினை ஸ்கேன் செய்த போது படம் பிடித்த மர்ம நபர்... புகார் அளித்த கருணாஸ் பட நடிகை!

ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் செய்த போது மர்ம நபர் ஒருவர் தன்னை புகைப்படம் எடுத்ததாக கருணாஸ் பட நடிகை புகார் அளித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் நடித்தவர் நடிகை நவ்நீத் கௌர். இவர் அதிகம் தெலுங்கு படங்களில் தான் நடித்துள்ளார். தமிழில் கருணாஸ் நடிப்பில் வெளியான ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு தமிழில் இவருக்கு படங்கள் சரிவர அமையவில்லை. நடிப்பும் மட்டும் இல்லாமல் அரசியலிலும் குதித்து மகாராஷ்டிரா மாநிலத்தில் எம்பியாகவும் உள்ளார். இவரது கணவர் ரவி ராணாவும் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே வீட்டின் முன் போராட்டம் நடத்தியதாக கூறி நவ்நீத் மற்றும் அவரது கணவர் ரானா இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்த நடிகை நவ்நீத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அங்கு உள்ள ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து அவரை படம் பிடித்ததாக நவ்நீத் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிந்த போலீசார்  மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.