பொழுதுபோக்கு

வெளியானது “காதல் தி கோர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடிக்கும் ‘காதல் தி கோர்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

‘தி கிரேட் இண்டியன் கிட்சன்’ படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்கும் அடுத்த படம் தான் ‘காதல் தி கோர்’. இந்த படத்தில் லாலு அலெக்ஸ், முத்துமணி, சின்னு சாந்தினி மற்றும் சுதி கோழிக்கோடு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்காரியா ஆகியோர் திரைக்கதை மற்றும், சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

12 ஆண்டுகளுக்கு முன்பு 'சீதாகல்யாணம்' படத்திற்குப் பிறகு ஜோதிகா மீண்டும் மலையாளத் திரையுலகிற்கு திரும்பியதை இப்படம் குறிக்கிறது. இப்படத்தை துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் விநியோகம் செய்யவுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மகிழ்ச்சி மலையாள பட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் பட ரசிகர்களுக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.