லோ பட்ஜெட் ஷார்ட் பிலிம் எடுக்கக்கூடிய நபர் நான், 20 ஆயிரம் ரூபாய்க்கு ஷார்ட் பிலிம் செய்யக்கூடிய எனக்கு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள திரைப்படத்தை பணியாற்ற வாய்ப்பு கொடுத்த ஜிவி.பிரகாஷ் அவர்களுக்கு நன்றி- இயக்குனர் கமல் பிரகாஷ்!
இது போன்ற படங்களை பத்திரிகையாளர்கள் ஊக்குவித்த தான் புதிய இயக்குனர்கள் உருவாக முடியும்- நடிகை திவ்யபாரதி!
நான் இங்கு நிற்பதற்கு காரணம் இயக்குனர் வெற்றிமாறன் தான் :- டிராகன் திரைப்பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!
தமிழ் சினிமாவில் சிறிய படம் எடுத்து ரிலீஸ் செய்யவே கடினமாக உள்ளது திரையரங்குகளை மட்டுமே நம்பி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளோம் - இயக்குனர் பா.ரஞ்சித்!
வெற்றிக்குப் பிறகு வரக்கூடிய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள் - நடிகர் ஜிவி பிரகாஷுக்கு - இயக்குனர் வெற்றிமாறன் அட்வைஸ்!
நாளை ஒரு ஹாலிவுட் படத்தை எடுக்க வேண்டுமென்றால் நமது திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்து செய்ய வேண்டும், முதல் படமாக தயாரித்துள்ளேன் ஒரு கணவுடன் எதிர்பார்ப்புடன் உள்ளேன் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என நினைக்கிறேன்- தயாரிப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ் பேச்சு!
அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் நடித்து, தயாரித்து, இசையமைத்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன்,பா.ரஞ்சித் சுதா கொங்கரா, அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இசை தட்டை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
கிங்ஸ்டன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்துருக்கும் அனைவருக்கும் நன்றி இந்த படத்தில் ஜிவி..பிரகேஷ், இயக்குனர் கமல் பிரகேஷ் ஆகிய இருவரும் இரவு பகல் பாராமல் உழைத்து உள்ளனர்.
அகழ்வாரை தாங்கும் நிலம்போல இயக்குனர் வெற்றிமாறன் இருந்து வருகிறார், ஒரு சிறந்த இயக்குனர் வெற்றிமாறன் கிராமத்தில் உள்ளவர்களுக்கு ஏழை எளியவர்களை கண்டறிந்து அவர்களது எதிர்காலம் குறித்த திரைப்படம் எடுப்பவர் வெற்றிமாறன், நான் ஒரு படம் தயாரித்த அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
கிங்ஸ்டன் திரைப்படம் கிங்காக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குனர் சுதா கொங்கரா பேச்சு
ஜிவி.பிரகேஷ் 20 ஆண்டுகளாக தெரியும், அன்றில் இருந்து ஒரு திரைபடம் சிறப்பாக எடுக்க வேண்டும் என்று கூறுவார். வித்யாசமாக படம் எடுக்க வேண்டும் என்று ஜிவி.பிரகேஷ் கூறுவர் படம் மிக பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
பின்னர் பேசிய கிங்ஸ்டன் பட இயக்குனர் கமல் பிரகேஷ்
இந்தப் படத்திற்காக பல நாட்கள் கஷ்டப்பட்டு உள்ளேன்,
லோ பட்ஜெட் ஷார்ட் பிலிம் எடுக்கக்கூடிய நபர் நான். 20 ஆயிரம் ரூபாய்க்கு ஷார்ட் பிலிம் செய்யக்கூடிய எனக்கு, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள திரைப்படத்தை பணியாற்ற வாய்ப்பு கொடுத்துள்ளார் ஜிவி.பிரகாஷுக்கு நன்றி
தயாரிப்பு நிறுவனத்திற்கு சொன்ன நேரத், சொன்ன தொகை உடன் இந்த படம் படப்பிடப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது
எதிர்பார்த்து திரைப்படம் வெற்றி பெற காத்துக் கொண்டிருக்கிறேன்
திரைப்படத்தில் பணியாற்றை அனைவருக்கும் நன்றி
பின்னர் பேசிய படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி
வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி
இயக்குனர் வெற்றிமாறன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தேன் அதன் பிறகு இப்போதுதான் சந்திக்கிறேன்
ஜிவி.பிரகாஷ் உடன் இரண்டாவது படம் பண்ணுவதை மகிழ்ச்சி அடைகிறேன்
இயக்குனர் கமல் பிரகேஷ் படப்பிடிப்பில் சத்தம் போட்டு அதிகமாக பேசியது கிடையாது ரொம்ப அமைதியாக இருக்கக்கூடிய இயக்குனரை ஆச்சரியமாக பார்க்கிறேன்
ஒளிப்பதிவாளர் 70 நாள் படப்பிடிப்பில் இருந்து தன்னிடம் ஒரு நாள் கூட பேசவில்லை.
இந்த திரைப்படத்திற்கு சப்போர்ட் செய்ய வேண்டும் இது போன்ற படங்களை பத்திரிகையாளர்கள் ஊக்குவித்த தான் புதிய இயக்குனர்கள் உருவாக முடியும்.
ஸ்டாண்ட் காட்சி செய்யும் போது இயக்குனர் தயாரிப்பாளரிடம் கோபித்து கொள்வேன் அதெல்லாம் கடந்து இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நிறைவடைந்தது என்றார்.
டிராகன் திரைப்பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேச்சு
கமல் பிரகாஷ் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுவதை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன், ஒரு பெரிய கப்பலில் பாகுபலி திரைப்படம் போல வடிவமைத்துள்ளனர்.படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆச்சரியப்பட்டேன், படம் டெக்னிக்கலாக சிறப்பாக செய்துள்ளனர்.
இனிய பிரகாஷ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக கடுமையாக உழைத்துள்ளனர்
இயக்குனர் பா ரஞ்சித் சார் ரொம்ப பிடிக்கும்
நான் இங்கு நிற்பதற்கு காரணம் இயக்குனர் வெற்றிமாறன்
ஒரு ஷார்ட் பிலிம்யில் விருது கொடுக்கும்போது தன்னை பற்றி பெருமையாக கூறினார் வெற்றி மாறன்
மார்க்கெட்டில் பெரிய அளவில் உள்ளார் தயாரிப்பாளர் தானு சார்
டிராகன் திரைப்படத்திற்கு பத்திரிக்கையாளர் எப்படி வெளிக்கொண்டு சென்றார்களோ? அதேபோல கிங்ஸ்டன் திரைப்படத்திற்கும் கொடுக்க வேண்டும் என்றார்
இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு
நம்பிக்கையுடன் இந்த திரைப்படத்தை ஆரம்பித்தால் ஜிவி.பிரகாஷ்
இந்தப் படத்தில் மீது அவருக்கு ஒரு பெரிய நம்பிக்கை இருந்தது
ஒரு பட்ஜெட்டை மீறி செலவு செய்வதற்கு ஒரு முக்கியமானதாக பார்க்கப்பட்டது
பொருளாதாரம் இல்லாமல் இது போன்ற பெரிய படங்கள் செய்ய முடியவில்லை
நான் வேற ஏதாவது பேசினால் நடிகர் ஜிவி பிரகாஷ் கிங்ஸ்டன் திரைப்படத்தை தனது மொபைலில் காட்டுவார்
தமிழ் சினிமாவில் படம் எடுத்து ரிலீஸ் செய்யவே கடினமாக உள்ளது
நல்ல ஒரு டெக்னீசியனகவும் ஆர்டிஸ்ட் ஆகவும் ஜீவ.பிரகாஷ் உள்ளார்
எனது அடுத்த படத்திற்கு ஜிவி பிரகாஷிடம் கூறிய போது சார் இசை தயாராக இருக்கிறது என்று கூறினார்
சிறிய படங்கள் எடுத்து வெளியிடுவது மிகவும் கடினமாக உள்ளது
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரே தேர்வு திரையரங்கங்கள் தான் அதை நம்பித்தான் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் உள்ளோம் என்றார்
இயக்குனர் வெற்றி மாறன் பேச்சு
பத்தாண்டுகள் இசையமைப்பாளராக இருந்து விட்டு திடீர் என்று நடிக்க வேண்டும் என்று கூறினார்
எப்போது போன் செய்தாலும் பிஸியாக இருப்பார்
ஒரே ரூம்குள்ள இருந்திருந்து போர் அடிக்குது ஆனால் நடிக்க வேண்டும் என்று கூறினார்
நமது உள்ளத்தில் ஒரு இசையமைப்பாளராக இருந்து ஏன் நடிக்கப் போகிறார் என்ற எண்ணம் இருந்தது?
தன்னை முன்னேற்றுவதற்கு பல விஷயங்கள் செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ்
கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ஒரு படம் தயாரிக்கப் போகிறேன் என்று கூறினார்
நான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு சென்றேன் எதற்காக போனேன் என்றால் நானும் இது போல ஒரு படம் இயக்கப் போகிறேன், எப்படி செட் அமைத்துள்ளார் என்பது பார்ப்பதற்காக போனேன்
அந்த படப்பிடிப்பு தளத்தில் உள்ள செட்டை பார்த்தால் அதிக அளவில் செலவிட்டு உள்ளனர் என்ற நினைத்தேன்
இந்த செட்-டை பார்த்த ஆச்சரியப்பட்டேன் கஷ்டப்பட்டால் தான் ஏதும் கிடைக்கும் நிச்சயம் கிடைக்கும்
வெற்றிக்குப் பிறகு வரக்கூடிய அனைத்து விஷயங்களும் பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளுங்கள்
திரைப்படத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர் என்றார்
இறுதியாக பேசிய நடிகர் ஜிவி பிரகாஷ்
சின்ன வயசில் இதை செய்யப் போகிறோம் அதை செய்யப் போகிறோம் என்று அம்மாவிடம் கூறினார்
அதேபோல நான் எது செய்தாலும் அதை வெற்றி மாறனிடம் சென்று கூறுவேன்
அதேபோல எனக்கு ராசியான தயாரிப்பாளர் கலைப்புலி தாணு
18 ஆண்டுகளாக இயக்குனர் வெற்றிமாறனுடன் பயணித்து வருகிறேன்
அடுத்தது வாடிவாசல் தயாராக உள்ளது
நடிகைக்கு மட்டும் எந்த ஒரு குறையும் படபிடிப்பில் இயக்குனர் கமல் பிரகேஷ் கூற மாட்டார் தன்னை மட்டும் பல குறைகளை கூறுவார்
எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதல் ஆளாக கமலஹாசன் வந்தார் அவருக்கும் நன்றி
படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமாக அனைத்தும் செய்துள்ளோம்
குறிப்பிட்ட தொகையில் இந்த திரைப்படத்தை முடித்துள்ளோம்
திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி
நடிகை திவ்யா பாரதி இன்ஸ்டாகிராம் பிரபலம்
உதவி இயக்குனர் புகைப்படம் எடுத்த இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தால் நடிகை திவ்யபாரதி மாதிரி பிரபலமாகிவிடலாம் என நகைச்சுவை
நாளை ஒரு ஹாலிவுட் படத்தை எடுக்க வேண்டுமென்றால் நமது திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை எடுத்து செய்ய வேண்டும்
முதல் படமாக தயாரித்துள்ளேன் ஒரு கணவுடன் எதிர்பார்த்து உள்ளேன் படம் வெற்றியடைய வேண்டும் என நினைக்கிறேன்
அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார்