பொழுதுபோக்கு

தோனி தயாரிக்கும் 'Let's get married'.. அதிகாரப்பூர்வ அப்டேட்

Malaimurasu Seithigal TV

தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படம் குறித்தானா அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவருமானவர் எம்.எஸ்.தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஓட்டல், உடற்பயிற்சிக்கூடம், இயற்கை விவசாயம், சென்னையின் எஃப் சி கால்பந்து அணியின் உரிமை என பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சினிமாத்துறையிலும்  'தோனி எண்டர்டென்மெண்ட்' என்ற நிறுவனத்தை தொடங்கி தற்போது  நேரடி தமிழ் படம் ஒன்றை தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதையொட்டி தோனி தயாரிக்கும் 'Let's get married' படத்தின் டைட்டிலை மோஷன் போஸ்டர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ரமேஷ்தமிழ்மணி இயக்க உள்ள இந்த படத்தில் நடிகை நதியா, ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.