அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகர் மாதவன். முதல் படமே மணிரத்னத்தின் இயக்கத்தில், A R ரஹ்மானின் இசையில் கதாநாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் தன் அசத்தல் நடிப்பின் மூலம் பல ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வந்தார்.
பின்பு மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் என்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்து வந்தார் மாதவன்.
சுமார் 20 வருடங்களாக தொடர்ந்து பல மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் மாதவன்,சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.
சோசியல் மீடியா மூலம் ரசிகர்களிடையே உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் மாதவன் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளது வைரலாகி வருகிறது.
மாதவனிடம் ரசிகை ஒருவர் "நான் உங்களை அப்பா என்று கூப்பிடலாமா ?" என்று கேட்டு பாச மழையை பொழிந்துள்ளார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த மாதவன் "என்னை அப்பா என்று கூப்பிட்டால் உன்னுடைய அப்பா கோபித்து கொள்வார் எனவே நீ என்னை அங்கிள் என கூப்பிட ட்ரை பண்ணு" என்று கூறியுள்ளார்.