பொழுதுபோக்கு

ஷூட்டிங் முடிந்தது, கேக் வெட்டிக் கொண்டாடிய ‘மாமன்னன்’ படக்குழு!!!

மாமன்னன் படத்தின் ஷூட்டிங் முடித்ததையொட்டி, படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது படத்தின் படபிடிப்பு முடிந்துள்ளது. அதனை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது. இந்த படத்தில், வைகை புயல் ‘வடிவேலு’ நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவைப் பார்த்து மகிழுங்கள்!!!