பொழுதுபோக்கு

கோலாகலமாக நடைபெற்று வரும் 76-வது கேன்ஸ் திரைப்பட விழா...வண்ண உடைகளால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த பிரபலங்கள்!

Tamil Selvi Selvakumar

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர், நடிகைகள் பல வண்ண உடை அணிந்து வந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து போஸ் கொடுத்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

76-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த விழா வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம், இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள ஆவணப் படம் மற்றும் படங்கள் திரையிடப்பட உள்ளன. 

பாலிவுட் நடிகைகள் சாரா அலிகான், முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர், மிக்கேல் யோ, மரியான் கொட்டிலார்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், மிக்கேல் யோ மச்சை மரகத உடை அணிந்து வந்து நடை பயின்றார்.

இதேபோல், நடிகை ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜஸ்டின் சியாரோச்சி உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கண்ணைக் கவரும் வண்ண உடைகளை அணிந்து வந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

600-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ள இந்த விழாவில், இந்தியாவின் சார்பில் மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்டகுழு கேன்ஸ் திரைப்படவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.