நடிகர் அஜித்குமாரின் படம், இன்று வெளியானதை முன்னிட்டு தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கில், படம் பார்க்க வந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கீதா ஜீவனுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து, பின்னர் ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
நடிகர் அஜித்குமார் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை, பெற்றுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் இன்று தூத்துக்குடி மாநகரப் பகுதியில் திரையரங்குகளில் வெளியானது.
இதைத்தொடர்ந்து காலையிலேயே, திரையரங்குகள் முன்பு அஜித் ரசிகர்கள் குவிய தொடங்கினர், அஜித் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது, தூத்துக்குடியில் பாலகிருஷ்ணா, கிளியோபட்ரா, பெரிசன் பிளாசா, கே எஸ் பி எஸ் கணபதி திரையரங்கம் உள்ளிட்ட 4 திரையரங்கில் திரைப்படம் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் கிளியோபாட்ரா திரையரங்கம் முன்பு, அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், கீதா ஜீவன் கலந்து கொண்டு அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த, பிரம்மாண்டமான கேக்கை வெட்டி ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார், பின்னர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து ரசித்தார், ரசிகர்கள் திரையரங்குக்கு முன்பு ஜெண்டை மேளம் முழங்க பட்டாசு வெடித்து, உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்