பொழுதுபோக்கு

உலக திருநங்கை அழகி போட்டி; 3வது இடத்தை பிடித்த சென்னை அழகி!

Malaimurasu Seithigal TV

உலக திருநங்கை அழகி போட்டியில் 3வது இடத்தை பிடித்த சென்னை பிராசிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் உலக  திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பிராசி என்பவர் பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார். பின்னர் சென்னை திரும்பிய திருநங்கை பிரேசிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் விமான நிலையத்தில் திருநங்கை பிராசி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  உலக அளவில் திருநங்கைகள் கலந்து கொண்டனர். உலக அளவில் திருநங்கை வாழ்வாதாரத்தை பார்க்கும் போது  இந்தியாவில் முன்னேற்றம் வர வேண்டும். இந்தியாவின் பெருமையை நிலை நிறுத்தி உள்ளேன். உலக அளவில் திருநங்கைகளுக்கு மாடல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு திறமைகள் அதிகமாக உள்ளது. எல்லோருக்கும் பின்னால் எண்ணங்களும் கதைகளும் உள்ளது. வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருக்க தான் செய்யும். நிறைய இடங்களில் தோல்வியை சந்தித்து உள்ளேன். ஆனால் தொய்வு ஏற்படாமல் முயற்சி செய்து கொண்டு இருந்தால்  வெற்றி கிடைக்கும். கனவு, கதைகளுக்கும் முக்கியமானவை. அவை முயற்சி முலம் அடையலாம் என தெரிவித்தார்.

மேலும், முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசுவேன் என தெரிவித்த அவர், சமூக நலத்துறை முலம் திருநங்கைகளுக்கு உதவி குறைவாக உள்ளது  என தெரிவித்தார்.