இந்த வாரம் சினிமா கார்னர் பக்கத்தில், கடந்த ஜுலை மாதம் ரிலீசான படம் 'Mrs & Mr' பற்றி பார்க்கலாம். படத்தோட கதைன்னு சொல்ல எதுவுமே இல்ல. செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கணவர் ராபர்ட்டின் 'செமன்' கேட்டு நச்சரிக்கிறார் வனிதா. ராபர்ட் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால், ஷகீலா உட்பட தோழிகளின் யோசையோடு ராபர்ட்டின் செமனை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என அவர் எடுக்கும் முயற்சிகள் தான் கதை. இந்த படம் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கவே முடியாத அளவுக்கு இருக்கிறது ஒரு பக்கம்ன்னா, தனியா பார்த்தால்கூடக் குமட்டல் வர்ற அளவுக்கு இருக்குறதுதான் பெரிய கொடுமை. அதிலும், உச்சக்கட்டமா ஒரு ஆபாச காட்சி இருக்கும் பாருங்க.. சாப்பிடும் போது மறந்தும் அதை பார்த்துடாதீங்க.
படத்தோட தயாரிப்புச் செலவு ரொம்பக் கம்மியா செஞ்சிருக்காங்கன்னு பார்த்தாலே தெரியுது. மகள் ஜோவிகாவை தயாரிப்பாளரா அறிவிச்சு, கை காசையெல்லாம் போட்டு இதை எடுத்திருக்காங்க. கேமரா ஆங்கிள்கள் எல்லாம் ஒரு அமெச்சூர் லெவல்ல இருக்கு. சினிமாவுக்குன்னு இருக்கிற எந்தவொரு தரமும் இந்தப் படத்துல இல்ல. ஒரு சின்ன டிராஃபிக் லைட் காமெடி ஷோவுக்குக் கூட இதைவிட நல்ல குவாலிட்டி இருக்கும். அதுக்குக்கூட ஒரு மெசேஜ் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல மெசேஜ், மேக்கிங், கதை, நடிப்புன்னு எதுவுமே இல்ல. முழுக்க முழுக்க ரசிகர்களை வெறுப்பேத்துறதுக்காகவே எடுத்த மாதிரி ஒரு ஃபீல். இதுல டைட்டில் கார்டுல ரஜினிக்கு நன்றி சொல்லி போட்ட கார்டெல்லாம் 'தலைவா இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சு தான் நடக்குதா' என்று கேட்கத் தோன்றுகிறது.
எத்தனையோ பேர் கஷ்டப்பட்டு, நல்ல சினிமாவை உருவாக்க போராடிட்டு இருக்கும்போது, இப்படிப்பட்ட தரமற்ற படங்களை எடுத்து, சினிமாவுக்கே கெட்ட பெயரை உருவாக்க வேண்டாம்னுதான் சொல்லத் தோணுது. இப்படிப்பட்ட படங்களைப் பணம் கொடுத்துப் பார்க்குறதை விட, அந்தப் பணத்தைக் கஷ்டப்படுற யாருக்காவது கொடுக்கலாம். அந்த அளவுக்கு இது ஒரு பெரிய வேஸ்ட்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.