Balaji murugadass video issue 
பொழுதுபோக்கு

"ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது".! பட வெற்றியின் குஷியில் பிக் பாஸ் பிரபலம் - வச்சு செய்த போலீஸ்

FIRE படத்திற்கு ரிவிய்யூ சொல்லியதால் FINE கட்டிய ரசிகர்கள். வாகனம் ஓட்டிக் கொண்டே ரிவ்யூ கொடுத்த ரசிகர்களுக்கு போக்குவரத்து போலிசார் அபராதம். ஃபயர் திரைப்படத்திற்கு காரில் சென்ற நடிகர் பாலாஜி முருகதாசிடம் ரிவ்யூ கொடுத்த ரசிகர்கள்.

Anbarasan

பிரபல ரியாலிட்டி ஷோ மூலமாக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். இவர் கதாநாயகனாகவும் ரக்ஷிதா, சாட்சியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் நடித்த ஃபயர் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, குறிப்பாக இந்த படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் டாக்டர் காசி என்பவர் பல பெண்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

சமூக வலைதளத்தில் பல விமர்சனங்களை பெற்று வரும் ஃபயர் படத்திற்கு ரிவ்யூ கொடுத்த ரசிகர்களுக்கு போக்குவரத்து போலீசார் அப்ராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பயர் திரைப்படத்தின் கதாநாயகனான பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆகியும் பொதுமக்கள் நடுரோடு என்று பார்க்காமல் ரிவியு அளிக்கும் வகையில் அவர்களிடம் சென்று சேர்ந்திருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்,குறிப்பாக இரண்டு ரசிகர்கள் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே காரில் சென்று கொண்டிருந்த நடிகர் பாலாஜி முருகதாஸ் பார்த்து ஃபயர் திரைப்படம் நன்றாக இருப்பதாகவும். உங்கள் திரைப்படத்தைத் தான் பார்த்து வருவதாகவும் நன்றாக நடித்துள்ளீர்கள் என வாகனத்தை ஒட்டிக்கொண்டே தெரிவித்துள்ளார்கள். மேலும் ஆட்டோ டிரைவர் ஒருவரும் வாகனத்தை ஓட்டிக்கொண்டு ரிவ்யு தெரிவித்துள்ளார் அதை நடிகர் பாலாஜி முருகதாஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாமலேயே ரசிகர்கள் நடுரோட்டில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு ரிவ்யூ சொன்ன காரணத்தினால் அதற்கு போக்குவரத்து போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு சென்னை போக்குவரத்துக் காவல் துறை சமூக வலைதள பக்கத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். ஒருவேளை அபராதம் விதித்தால் அதை தானே கட்டுவதாகவும் நடிகர் பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதை எடுத்து சமூக வலைதள பக்கத்தின் மூலமாக போக்குவரத்து போலீசார் கவனத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு ஹெல்மெட் அணியாமல் சென்ற இரண்டு ரசிகர்களுக்கும் 2000 ரூபாய் அபராதம் விரித்துள்ளது இதை நடிகர் பாலாஜி முருகதாஸ் சமூக வலைதள பக்கத்திற்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை போக்குவரத்து போலீசார் புகைப்படத்துடன் கூடிய சலானையும் அனுப்பி வைத்துள்ளனர்.

நடுரோட்டில் ஹெல்மெட் அணியாமல் FIRE படத்திற்கு ரிவ்யூ சொல்லப் போய், நடிகர் வெளியிட்ட வீடியோவால் FINE கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..