சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, தனது வீவாகரத்தை அறிவித்ததில் இருந்து பெரிதாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால், தற்போது விவாகரத்தையும் ரத்து செய்துள்ளதாக தகவல் தெரிவித்ததோடு, “லால் சலாம்” என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | இரண்டாம் முறையாக நடக்க பழகும் பூஜா ஹெக்டே...
இதனைத் தொடர்ந்து, அதர்வாவிற்கு பதிலாக இந்த படத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் முதலில் அதர்வா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக தற்போது படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளார் என தகவல் வெளியானதை அடுத்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வரியா தற்போது இயக்கும் இந்த புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பை ஏ.ஆர். ரஹ்மான் முடித்துள்ளதாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??