சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த பெயரிலேயே ஒரு உத்வேகம் ஏற்படும். அந்த அளவிற்கு மாஸான ஸ்டைல், சுறுசுறுப்பு என இருந்து வரும் அவருக்கு இன்று 72 - வது பிறந்தநாள். கோலிவுட்டையே ஆண்டுக்கொண்டிருக்கும் அவருக்கு உலகம் முழுவதிலும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். அவருடைய பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.இதற்காக பல இடங்களில் கேக் வெட்டி, வெடி வெடித்து, போஸ்டர்கள் ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அதிலும் பல போஸ்டர்கள் பெரும் கவனத்தை பெற்றது.
மேலும் படிக்க | வாழும் வள்ளுவரே...! இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை...
இந்நிலையில் அவரின் பிறந்தநாளுக்கு அரசியல் பிரபலங்கள் தொடங்கி, திரைத்துறையினர், ரசிகர்கள், மக்கள் என பலரின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் ரஜினி. தற்போது அவரது நடிப்பில் உருவாகி வருகிறது ஜெய்லர் திரைப்படம். நடிகர் ரஜினிகாந்தின் 169 வது படமான ஜெய்லர் படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், சிவா ராஜ்குமார், வசந்த் ரவி, விநாயகன், பிரியங்கா மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தின் அப்டேட் குறித்து “முத்துவேல் பாண்டியன்” வரவிருக்கிறார் என நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது. அதன்படி பிறந்தநாளான இன்று, மாலை 6 மணிக்கு மாஸாக வெளியானது படத்தின் ஸ்பெஷல் வீடியோ. அந்த வீடியோவில் ரஜினி, கெத்தாக கால் மேல் கால் போட்டு போஸ் கொடுத்துக்கொண்டு, ஒரு நீண்ட கத்தியுடன் கண்ணாடி அணிந்துக்கொண்டு மாஸாக இருக்கிறார். அனிருத் அவருக்கே உரிய இசை பாணியில் பி.ஜி.எம்-ஐ தெரிவிக்கவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
-- சுஜிதா ஜோதி