பொழுதுபோக்கு

டப்பிங்போது சமந்தாவை கட்டிப்பிடித்த நயன்தாரா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Tamil Selvi Selvakumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகையாக விளங்கும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசரே பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். 

இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி அன்று பிரம்மாண்டமாக வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி 'KRK'படத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ”டுடுடு” என்ற பாடலின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. செம கலர்ஃபுல்லாக இருக்கும் இந்த வீடியோவில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் விஜய் சேதுபதி செம ஆட்டம் ஆடும் காட்சிகள் இருப்பதால், இந்த கிளிம்ஸ் வீடியோவே படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு தூண்டியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங்போது ஒரு காட்சியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நயன்தாரா, சமந்தாவை கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்த வீடியோவை சமந்தா தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.