பொழுதுபோக்கு

டீசர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றிருந்ததால் சமந்தாவை விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்!!

Tamil Selvi Selvakumar

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகை சமந்தா, கடந்த சில நாட்களுக்கு முன்பு சலூன் கடை ஒன்றிலிருந்து வெளியே வந்த போது ரசிகர் ஒருவரால் எடுக்கப்பட்ட போட்டோ தற்போது பேசப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ள நிலையில், போட்டோவில் அவர் அணிந்திருந்த டீசர்ட் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

ஏனென்றால், அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றிருந்ததால், நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை விமர்சனம் செய்துவருகின்றனர். இருப்பினும் இது குறித்து சமந்தா எந்த வித விளக்கமும் தரவில்லை. எப்போதும்  போலவே இந்த விமர்சனத்தையும் சமந்தா கண்டுகொண்டதாக தெரியவில்லை.