பொழுதுபோக்கு

சிம்புவின் 'மாநாடு' படத்தின் டிரெய்லர் குறித்த புதிய அப்டேட் இதோ.!!

Malaimurasu Seithigal TV

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் படம் தான் மாநாடு. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று தனது காட்சிகளுக்கான டப்பிங்-ஐ தொடங்கியுள்ளார் நடிகர் சிம்பு.

இந்நிலையில் 'மாநாடு' படத்தின் டிரெய்லர் குறித்து இன்று தகவல் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்

இதனையடுத்து இப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.