பொழுதுபோக்கு

‘ஜெயிலர்’-க்கு அடுத்தது கே.ஜி.எஃப் படக்குழு... அடுத்தடுத்து தயாராகும் ரஜினி படங்கள்...

கே.ஜி.எஃப் படக்குழுவுடன் தனது அடுத்த படத்தை ரஜினி ஒப்பந்தம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Malaimurasu Seithigal TV

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்கள் என்றால், மூன்று தலைமுறைகளாக படு பயங்கரமான ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தனது பிரத்யேகமான ஸ்டைல் மற்றும் எதார்த்தமான மனதை வெல்லும் நடிப்புடன் பல தலைமுறை ரசிகர்களை உலகளவில் கொண்ட ரஜினி காந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக தயாராகி வரும் படமான ஜெயிலர்- படபிடிப்பு தற்போது மங்களூரில் நடக்க இருக்கும் நிலையில், பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் தளத்திற்கு கிளம்பினார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் குஷியை தந்துள்ளது.

கே.ஜி.எஃப் படமானது கடந்த 4 ஆண்டுகளாக உலகளவில் பிரம்மாண்டமான வரவேற்புப் பெற்றதையடுத்து, அக்குழுவின் அடுத்த படமான காந்தாரா-வும் நல்ல வசூல் பெற்றது. இந்நிலையில், சலார் படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வந்துள்ளதாக, கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பல கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தன்னை திருப்திப் படுத்தக் கூடிய எந்த ஒரு நல்ல கதையும் இது வரை உருவாகவில்லை என வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை அவர் சந்தித்தது சினிமா வட்டாரங்களில் ஒரு சலசலப்பு கிளம்பி இருக்கிறது.

ஐஸ்வரியா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினிகாந்த், அடுத்ததாக கே.ஞானவேல் ராஜா தயாரிப்பில் அடுத்த கதையை கேட்டு ஓகே சொன்னதாகவும், அந்த கதைக்கான இயக்குனர் யார் என்ற தகவல் சரி வர தெரியாததாகவும் கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு, சினிமா ரசிகர்களுக்கு பெரும் குஷியைக் கொடுத்துள்ளது.