திடீரென உதட்டில் முத்தமிட்ட ரசிகை: ரெட் கார்பெட் சர்ச்சை குறித்து மனம் திறந்த நடிகை நிகிதா ராவல்! 
பொழுதுபோக்கு

திடீரென உதட்டில் முத்தமிட்ட ரசிகை: ரெட் கார்பெட் சர்ச்சை குறித்து மனம் திறந்த நடிகை நிகிதா ராவல்!

அதிர்ச்சியடைந்த நிகிதா, உடனே அவரைத் தடுத்து அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல முயல்கிறார். இருப்பினும், அந்தப் பெண் ரசிகை நிகிதாவைப் பிடித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அவரது கன்னத்தில் முத்தமிட்ட பிறகே அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

மாலை முரசு செய்தி குழு

சமீபத்தில் நடைபெற்ற சிவப்புக் கம்பள நிகழ்வு ஒன்றில், நடிகை நிகிதா ராவல் எதிர்பாராத சங்கடத்தை எதிர்கொண்டார்.

அவரைச் சந்தித்த பெண் ரசிகை ஒருவர், திடீரென நிகிதாவின் உதட்டில் முத்தமிட்டார். இந்தத் தருணம் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நடிகை நிகிதா ராவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்தச் சூழலில் தனக்கு ஆதரவாகச் செய்தி அனுப்பிய ரசிகர்களின் கருத்துகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

தனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, "உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. இதை நான் மனப்பூர்வமாக மதிக்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதும், எனது தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும். மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை; நான் எப்போதும் உண்மையின் பக்கமே நிற்பேன்" என்று எழுதியுள்ளார் நிகிதா.

நிகிதா ராவல்

சிவப்புக் கம்பள நிகழ்வில் நடந்தது என்ன?

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், நிகிதா ஒரு பெண் ரசிகையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென நிலைமை சங்கடமாக மாறுகிறது. அந்தப் பெண் ரசிகை, முதலில் நிகிதாவின் கன்னத்தில் முத்தமிட்டு, அடுத்த கணமே எதிர்பாராத விதமாக அவரது உதட்டிலும் முத்தமிடுகிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நிகிதா, உடனே அவரைத் தடுத்து அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல முயல்கிறார். இருப்பினும், அந்தப் பெண் ரசிகை நிகிதாவைப் பிடித்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அவரது கன்னத்தில் முத்தமிட்ட பிறகே அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

யார் இந்த நிகிதா ராவல்?

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நிகிதா ராவல், 'பிளாக் & வைட்' (Black & White), 'மிஸ்டர் ஹாட் மிஸ்டர் கூல்' (Mr Hot Mr Kool), 'தி ஹீரோ - அபிமன்யு' (The Hero – Abhimanyu), 'அம்மா கி போலி' (Ammaa Ki Boli), 'கரம் மசாலா' (Garam Masala) மற்றும் 'க்யூட் கமீனா' (Cute Kamina) உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து, 2012-ஆம் ஆண்டு விக்ரம் ராயுடன் இணைந்து நடித்த 'டிம்பா' (Timpa) திரைப்படம் மூலம் தெலுங்குத் திரையுலகிலும் நிகிதா ராவல் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.