சமீபத்தில் நடந்த திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில், அதிக கவனம் பெற்றது, இந்த படத்தின் நாயகியான நித்யா மேனன் தான்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை தனுஷ் வைத்துக் கொடுத்த மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் திருச்சிற்றம்பலம். டாமியன் சாசெல் எழுதிய இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக, மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் இந்த் அபடம் உருவாகிய்இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில், வருகிற ஆக்ஸ்டு 18ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம், மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, படத்தின் புதிய அப்டேட்டாக இசை வெளியீடு குறித்த தகவல் வெளியிடப்பட்டது.
கடந்த ஜூலை 30ம் தேதி நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, தனுஷ், அனிருத், நித்யா மேனன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தனுஷ் ஒரு இசை வெளியிட்டு விழாவில் கலந்துக் கொள்வதால், இதன் எதிர்பார்ப்பு மக்களிடையே மிகவும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்து கொண்ட நித்யா மேனன், வீல் சாரில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது.
சமீபத்தில், ஃப்ரென்ச் தொடரான மாடர்ன் லவ் என்ற தொடரின் தமிழாக்கத்தில் நடித்த நித்யா மேனன், அதில் காலில் அடிப்பட்ட கதாபாத்திரமாக நடித்திருப்பார். நடிகை மற்றும் இயக்குனர் ரேவதிக்கு மகளாக நடித்திருந்த நித்யா, தனது இன்ஸ்ஆகிராம் பக்கத்தில், காலில் அடிப்பட்டு, இருப்பது போல, ஒரு போட்டோவை வெளியிட்டிருந்தார்.
தனது கணுக்காலில் அடிப்பட்டிருந்ததால், அவருக்கு நடப்பதே சிரமமாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தார். அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் அவர் வீல் சாரில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் அழகாக நடித்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வரும் நிலையில், நித்யா மேனன் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.