பொழுதுபோக்கு

ஆஸ்கா் விருது; தீபிகா படுகோனே பெயா் அறிவிப்பு

Malaimurasu Seithigal TV

ஆஸ்கர் விருதுகளை வழங்கப்போகும் பிரபலங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகை தீபிகோ படுகோனேக்கு ரசிகா்கள் வாழ்த்துக்களை பகிா்ந்து வருகின்றனா்.

95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வருகிற 12-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுகளை வழங்கப்போகும் பிரபலங்களின் முதற்கட்ட பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே பெயரையும் ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டுள்ளது. இதுதொடா்பான புகைப்படத்தை அவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அவருக்கு ரசிகா்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனா்.