பொழுதுபோக்கு

தொடரூம் சமூக அநீதி...கண்டன குரல் எழுப்பிய பா.ரஞ்சித்..!

Tamil Selvi Selvakumar

குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக ஆதி திராவிட நலத்துறை அமைச்சரையும், தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையும் தாக்கி இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் :

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ”நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படம் ம்க்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, தற்போது விக்ரம் நடிக்கும் “தங்கலான்” படத்தை இயக்கி வருகிறார். 

தொடர் குரல் :

படங்களின் மட்டும் சமூக பிரச்சினை குறித்து சொல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 

தொடரூம் சமூக அநீதி :

இந்நிலையில், புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்னை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டன குரல் எழுப்பிள்ளார். 

அந்த பதிவில், ”தொடரூம் சமூக அநீதி...!புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரனை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடும் கண்டனங்கள்!!
வன்கொடுமைகள் எதிர்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்!” என்று ஆதி திராவிட நலத்துறை அமைச்சரையும், தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களையும் தாக்கி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.