பொழுதுபோக்கு

வெளியானது பன்னிக்குட்டி ட்ரெயிலர். காமெடி கலாட்டாவாக அமைந்த படத்திற்கு குவியும் ரசிகர் கூட்டம்:

யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி கலாட்ட படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் படு ஆவலாக காத்து வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள பன்னிக்குட்டி படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. காமெடி கலாட்டா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் படு ஆவலாக காத்து வருகின்றனர்.

காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறும் பலருக்கு நடுவில், இவரெல்லாம் ஹீரோவா எனக் கேள்விக் கேட்டவர்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் தகர்த்தெரிந்து, இன்று தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்திருப்பவர் தான் யோகி பாபு. தனது வித்தியாசமான தோற்றம், மற்றும் எதார்த்த நடிப்பை வைத்து எந்த வித சீனாக இருந்தாலும் அதனை நகைச்சுவையாக மாற்றி, ரசிகர்களிடம் கைத்தட்டு வாங்கி விடுவார் அவர்.

‘வாடா வாடா பன்னி மூஞ்சி வாயா’ என கண்ணாடி முன் அழைக்கப்பட்ட யோகி பாபு, இன்று பன்னிக் குட்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருடன் திரையுலகிற்கு வருகைத் தந்த நடிகர் கருணாகரனும், இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கிருமி படத்தின் மூலம் திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இயக்குனர் அனுசரண், சமீபத்தில் வெளியான சிறப்பு வெப்சீரியசான சுழல்- ஐ இயக்கினார்.  அவரது அடுத்த படைப்பான இந்த பன்னி குட்டி படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

சூப்பர் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகமூடி, யுத்தம் செய், கிருமி, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களின் இசையமைப்பாளர் கே தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சதிஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு, கருணாகரனுடன், லக்ஷ்மி பிரியா, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, தங்கதுறை போன்ற பலரும் நடித்துள்ளனர். ஒரு சிறிய வெள்ளை பன்னிக்குட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த காமெடி படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும், “காரியத்த முடிச்சுட்டு வாங்க; காணிக்கையை அப்பறம் வாங்கிக்கிறேன்” என லியோனியின் குரலில் முடியும் இந்த ட்ரெயிலர் இறுதி காட்சி வரை சிரிக்க வைப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.