பொழுதுபோக்கு

ஆஸ்காரின் வெளிநாட்டு திரைப்படங்களுக்கான தகுதிப் பட்டியலில் பெப்பல்ஸ்!! மகிழ்ச்சியில் நயன்தாரா, விக்னேசிவன்!!!  

Malaimurasu Seithigal TV

இன்று விடியற்காலை வெளிநாட்டு திரைப்படங்களுக்கான தகுதிப் பட்டியலை ஆஸ்கார் விழா கமிட்டியினர் வெளியிட்டிருந்தனர். அந்த பட்டியலில் பல வெளிநாட்டு திரைப்படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் தமிழ் திரைப்படமான 'பெப்பல்ஸ்' திரைப்படமும் இடம்பெற்று இருந்தது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவின் சார்பாக ஆஸ்காருக்கு 'பெப்பல்ஸ்' திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஆஸ்கார் திரைப்பட விழா கமிட்டியினரும் இப்படத்தினை தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதனால் அப்படத்தின் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன், நயன்தாரா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து ஆஸ்கார் பரிந்துரை பதிவை பதிவிட்டு விக்னேஷ் சிவன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். 

இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இப்படம் உண்மை கதையை தழுவி  மதுரையின் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் உண்மை தன்மையுடன் படமாக்கப்பட்டதாக படக்குழுவினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.