பொழுதுபோக்கு

இவருக்கு வாழ்நாள் முழுவதும் பீட்சா இலவசம்... டோமினோஸ் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவிற்கு முதலாவதாக வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த மீராபாய்க்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா வழங்கவுள்ளதாக டோமினோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக்ஸ் தொடர் ஜூலை 23ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியாவிற்குப் பின்னடைவு ஏற்பட்டாலும், வெள்ளிப் பதக்கம் வென்று ஆறுதல் அளித்தார் மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் சானு. மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவுக்காக கலந்துகொண்ட ஒரே வீராங்கனை மீரா பாய் தான். மொத்தம் 202 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்று கொடுத்தவர் என்பதால் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், மீரா பாயை பாராட்டும் விதமாக டோமினோஸ் பீட்சா நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “மீராபாய் சானு இந்திய நாட்டுக்காக வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்நாளுக்கும் இலவசமாக பீட்சாகளை வழங்கவில்லை என்றால் எங்களால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்க முடியாதுஎன்று குறிப்பிட்டுள்ளதூ. இதன் மூலம் மீரா பாய் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பீட்சா வழங்கவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மீரா பாய் வெற்றி பின் வெளியிட்ட வீடியோ ஒன்றில், நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக எனக்குப் பிடித்த உணவுகளை உண்ணாமல் மிகக் கடுமையான டயட்டில் இருந்தேன். குறிப்பாக எனக்கு மிக மிக பிடித்த பீட்சாவை சாப்பிடுவதற்கு இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.