பொழுதுபோக்கு

400 கோடி செலவில் பிரபாஸின் ராதேஷ்யாம்.. மிரட்டலாக வெளிவந்த டீசர்

Malaimurasu Seithigal TV

தென்னிந்திய சினிமாவின் முன்ணனி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படங்களின் வெற்றி அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. 

படத்திற்கு படம் பிரம்மாண்டம் காட்டுவதில் பிரபாஸ் பட இயக்குனர்கள் அதிகம் கவனம் எடுத்து வருகின்றனர். அந்தவகையில் அடுத்ததாக சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ராதேஷ்யாம் என்ற படம் உருவாகியுள்ளது. 

காதல் கதைக்கு எதற்கு இவ்வளவு பட்ஜெட் என ஒருபக்கம் கேள்வி எழும்ப சமீபத்தில் வந்த டீசரை பார்க்கும்போது கண்டிப்பாக இது காதல் படம் மட்டும் அல்ல என்பது தெரியவருகிறது.

ரதேஷ்யம் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இன்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு ராதேஷ்யாம் படக்குழுவினர் டீசரை வெளியிட்டு உள்ளனர். 

பார்ப்பதற்கு சாஹோ பட ஸ்டைலில் இருந்தாலும் படத்தில் 400 கோடி செலவு செய்து பிரமாண்டமாக செய்து இருப்பது நன்றாகவே தெரிகிறது. மேலும் பிரபாஸின் தோற்றமும் இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது.

ராதே ஷ்யாம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.