பொழுதுபோக்கு

ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட்...பிரேம்ஜியின் முதல் கமெண்ட்!

ரம்யா பாண்டியன் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு  முதல் நபராக கமெண்ட்ஸ் செய்த பிரேம்ஜி அமரன்...

Tamil Selvi Selvakumar

ஜோக்கர் படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடவில்லை. என்ன செய்வது என யோசித்த ரம்யா பாண்டியன் நடிகைகளின் யுக்தியை கையாண்டார்.  

கேஷுவலாக தனது வீட்டின் மாடியிலிருந்து போட்டோ சூட் ஒன்றை நடத்தினார். அதில் இடுப்பு மடிப்பு தெரிவது போது எடுத்த புகைப்படம் இணையத்தளத்தில் செமயாக வைரலானது. அதன்மூலம் சமூகவலைத்தளங்களில் மிக பெரிய அளவில் டிரெண்ட் ஆன அவருக்கு குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்பட பல வாய்ப்புகள் கிடைத்ததோடு அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகி நடிக்க தொடங்கினார்.

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்நிலையில் கிட்டத்தட்ட அதே பாணியில் ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.