நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் டாக்டர். இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். டாக்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
எனவே இந்தப் படத்திற்குப் பிறகு கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.
தற்போது கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கும் பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள ‘டிக் டாக் ’படத்தின் டீசரை சமூகவலைதளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை பார்த்ததும் தமிழ் ரசிகர்கள் ஆடி போயுள்ளனர்.
ஏனென்றால் டாக்டர் படத்தில் ஒரு குடும்ப பாங்காக பார்த்த பிரியங்காவை, இந்த டீசரில் படு கவர்ச்சியில் பார்த்ததும் ரசிகர்கள் ஆடி போயுள்ளனர்.
எனவே டீசரே இந்த அளவிற்கு இருந்தால் படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுக்குள் சோஷியல் மீடியாக்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா அருள்மோகனை டாக்டர் படத்தில் பார்த்த ரசிகர்கள் வேறொரு கோணத்தில் பார்க்க இந்த படத்தின் ரிலீசுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.