பொழுதுபோக்கு

பிரியாமணியின் திருமண வாழ்வில் முதல் மனைவியால் ஏற்பட்ட பிரச்சனை.! 

Malaimurasu Seithigal TV

பிரபல நடிகை பிரியாமணிக்கும், தொழில் அதிபர் முஸ்தபா ராஜுக்கும் நடந்த திருமணம் செல்லாது என்று முஸ்தபாவின் முதல் மனைவி ஆயிஷா எதிர்ப்பு கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் அறிமுகமான அவர் பிறகு பாலுமகேந்திராவின், அது ஒரு கனாகாலம், அமீரின் பருத்திவீரன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருதும் வென்றார். அதன்பின்னர் பல படங்களில் நடித்த இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் பிரியாமணியின் திருமணம் செல்லாது, அது சட்டவிரோதமானது, நாங்கள் முறையாக விவாகரத்து பெறவில்லை என்று முஸ்தபா ராஜின் முதல் மனைவி ஆயிஷா பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்து ஆயிஷா கூறும்போது, “என்னை முஸ்தபா இன்னும் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை. நாங்கள் பிரிந்து இருந்தாலும் இன்னும் அவர் எனது கணவர்தான். பிரியாமணி, முஸ்தபாவின் திருமணம் சட்டப்படி செல்லாது’’ என்று கூறியுள்ளார். 

அதோடு இதுகுறித்து முஸ்தபா மற்றும் பிரியாமணி மீது கிரிமினல் புகாரும் குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளார். இதனால் பிரியாமணியின் திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.