பொழுதுபோக்கு

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் - தயாரிப்பாளரிடம் மனம் திறந்த நடிகர் விஜய்

Tamil Selvi Selvakumar

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என தளபதி விஜய் தன்னிடம் கூறியதாக தயாரிப்பாளர் தில் ராஜூ பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியாகு என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ படத்தை இயக்குனர் வம்சி இயக்குவதும், தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதும் ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ’தளபதி 66’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ நேற்று பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர்  பேட்டியில் பேசியபோது, 20 வருடங்களுக்கு பிறகு ’பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என்று விஜய் தன்னிடம் கூறியதாகவும், ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தால் இந்த ஆண்டு தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.