பொழுதுபோக்கு

ஜெயில் படத்தை ஓடிடி தளங்களில் வெளியிட தடையா..? 

ஜெயில் படத்தை ஓடிடி தளங்களில்  வெளியிட மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் அனுமதியை பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'ஜெயில்'  படத்தை வெளியிட தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி படத்தை தயாரிக்க 7 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ததன் மூலம் வசூலாகும் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி, அதில், 7 கோடி ரூபாயை தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமை குறித்து மத்தியஸ்த தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி தயாரிப்பு நிறுவனம் எந்த முடிவையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.