பொழுதுபோக்கு

”கே.ஜி.எப் 2” வின் பிரபல வசனத்தை மாற்றி கல்யாண பத்திரிக்கையில் பட்டைய கிளப்பும் பஞ்ச்! வெறித்தனமான ரசிகனா இருப்பார் போலேயே..!

Tamil Selvi Selvakumar

கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படத்தில் இடம்பெற்ற, மிகவும் பிரபலமான வசனத்தை சற்று மாற்றி, திருமணப் பத்திரிக்கையில் அச்சிட்டுள்ள மணமகனின் செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேஜிஎப் சாப்டர் ஒன் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎப் சாப்டர் 2 திரைப்படம், உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  

இந்த நிலையில், கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர், கேஜிஎப் 2 திரைப்படத்தில் வைலன்ஸ் பற்றி நடிகர் யாஷ் பேசிய புகழ்பெற்ற வசனமான "Violence...Violence...Violence...I dont like it... I avoid...But Violence like me... I cant avoid" என்பதை, சற்றே மாற்றி தன்னுடைய திருமண அழைப்பிதழில் அச்சடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.