பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி, மும்பையில் நடந்த ஹேமஷ் ரேஷாமியாவின் கான்சர்ட்டில் கலந்துகொண்டப்போ, அவரும், அவரோட கிசுகிசு பாய்ஃப்ரெண்ட் ராச்சித் சிங்கும் ஷேர் பண்ண ரொமான்ஸ் மொமண்ட்ஸ் இப்போ இன்டர்நெட்டில் பயங்கரமா வைரலாகி இருக்கு. நடிகை ஹுமா குரேஷியும், ஆக்டிங் கோச் ராச்சித் சிங்கும் ரொம்ப நாளா டேட்டிங் பண்றாங்கன்னு பேசப்படுது. செப்டம்பர் மாசமே இவங்க ரெண்டு பேருக்கும் யுஎஸ்-ல என்கேஜ்மென்ட் ஆச்சுன்னு கூட நியூஸ் வந்திருந்தது. ஆனா, அவங்க இன்னும் அதை 'அபிஷியல்' ஆக்கல.
அந்த கான்சர்ட்ல எடுத்த ஒரு வீடியோல, ஹுமாவும் ராச்சித் சிங்கும் மியூசிக் என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அப்போ, ராச்சித் சிங், ஹுமாவை பின்னாடி இருந்து லவ்வாக ஹக் பண்ணி, அவங்க நெற்றியில ஸ்வீட்டா கிஸ் பண்ணினார்.
இந்த ரொமான்டிக் மொமன்ட்ட கேமரால ஷூட் பண்ணின உடனேயே, "கேமராஸ் இருக்கு, கவனமா இருங்க"ன்னு ஹுமா, ராச்சித்தை பார்த்து எச்சரிச்சதா தெரிகிறது. ஹுமா சொன்ன உடனே, ராச்சித் சிங் அவரோட கையை உடனே எடுத்துட்டு, பின்னாடி நகர்ந்துட்டார். அங்கிருந்த மௌனவர் ஃபாரூக்கி, சன்யா மல்ஹோத்ரா, ஃபாத்திமா சனா ஷேக் உட்பட பல செலிபிரிட்டிஸுடனும் அவங்க பேசி என்ஜாய் பண்ணினாங்க.
ஹுமா குரேஷியோட பாய்ஃப்ரெண்ட் ராச்சித் சிங் ஒரு ஆக்டிங் கோச். ஆலியா பட், ரன்வீர் சிங், விக்கி கௌஷல் போன்ற பெரிய ஸ்டார்களுக்கு ட்ரெய்னிங் கொடுத்திருக்கார். சமீபத்துல ரிலீஸான 'தாம்மா' (Thamma) ஃபிலிம்ல அவர் ஒரு ரோலிலும் நடிச்சிருந்தார். ஹுமா குரேஷி இப்போ அவரோட லேட்டஸ்ட் வெப் சீரிஸ் (latest web series) 'டெல்லி க்ரைம் 3' மற்றும் 'மஹாராணி 4' (Maharani 4)-க்காக ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுக்களை வாங்கிட்டு இருக்காங்க. குறிப்பா, இவர் காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.