madarasi vs rajini 
பொழுதுபோக்கு

"மை காட்.." மதராஸி படம் பார்த்து பிரமித்த ரஜினி! - மகிழ்ச்சியின் உச்சத்தில் எஸ்கே...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறார்....

மாலை முரசு செய்தி குழு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருக்கிறார்.

இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கமான X-இல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அதில் அவர், "எனது ஆதர்ச நாயகனிடமிருந்தும், எனது தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடமிருந்தும் 'மதராசி' படத்திற்கான பாராட்டைப் பெற்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனைப் பாராட்டிப் பேசிய வார்த்தைகளையும் அவர் தனது பதிவில் பகிர்ந்து கொண்டார்:

"மை காட்... எக்ஸலண்ட்! என்ன பர்ஃபாமன்ஸ்! என்ன ஆக்‌ஷன்ஸ்! சூப்பர் சூப்பர் எஸ்.கே! எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. ஆக்‌ஷன் ஹீரோ ஆகிட்டீங்க. காட் பிளஸ், காட் பிளஸ்."

மேலும், தனது தலைவர் ரஜினிகாந்தின் வர்த்தக முத்திரை சிரிப்புடன் வாழ்த்துக்கள் கிடைத்ததாகவும், "லவ் யூ தலைவா" என்றும் நெகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் பதிவிட்டிருந்தார்.

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அப்போது ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, அப்படத்தின் வெற்றி குறித்து வாழ்த்துகளைப் பெற்றார். அந்த வரிசையில், இப்போது 'மதராஸி' படத்துக்காகவும் ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டைப் பெற்றது கவனிக்கத்தக்கது.

'மதராஸி' திரைப்படத்தில், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், சபீர் கல்லரக்கல் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சிலர் படம் குறித்து நெகட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்தாலும், சிவகார்த்திகேயனை ஒரு பக்கா ஆக்ஷன் மெட்டீரியலாக இப்படம் உருமாற்றியுள்ளது என்பதை மறுக்க முடியாது. விஜய்க்கு 'துப்பாக்கி' படம் மாதிரி எஸ்கேவுக்கு 'மதராஸி' என்று சொல்ல முடியாவிட்டாலும், விஜய்யிடம் தான் வாங்கிய துப்பாக்கிக்கு தகுதியானவன் தான் என்பதை எஸ்கே நிரூபித்திருக்கிறார் என நிச்சயம் சொல்லலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.