பொழுதுபோக்கு

பிரபல இயக்குனரின் மகள் ஹீரோயின் ஆகிறார்...!  

Tamil Selvi Selvakumar

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி நாயகியாக அறிமுகமாகிறார். 

தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்டு புதிய படம் தயாராகிறது. மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜி ஏ. ஹரிகிருஷ்ணன் தயாரிக்கும் இந்தப் படத்தை ரெங்கநாதன் இயக்குகிறார். இதில் இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, சுனில், ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி, வினோதினி உட்பட பலர் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி நாயகியாக அறிமுகம் ஆகிறார். இதில் இன்னொரு நாயகியும் நடிக்க நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் பகுதிகளில் நடந்து வருகிறது. முன்னதாக,  ‘சர்வம் தாள மயம்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் சரஸ்வதி ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.