பொழுதுபோக்கு

மம்மூட்டியுடன் இணைந்த ரம்யாபாண்டியன்...!

குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த நடிகை ரம்யா பாண்டியன் அடுத்ததாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Malaimurasu Seithigal TV

குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யாபாண்டியன். இவர் தற்பொழுது மலையாள சூப்பஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்துவருவதாக ஒரு சில புகைப்படங்கள் சமூகவளைதளத்தில் பகிரபட்டு வந்தது. இந்நிலையில் நடிகை ரம்யாபாண்டியன் தனது அதிகாரபூர்வ வலைதள பக்கத்தில் அது குறித்த செய்தியைப் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். 

இப்படத்தினை ஆமென், அங்கமாளி டைரிஸ், ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற மலையாள  திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி இயக்குகிறார். இப்படத்திற்கு 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழ். மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிவருகின்றது. இப்படத்திற்கு தரமணி, பேச்லர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் ஆகியோர்  ஒளிப்பதிவு செய்துவருகிறார். 

இதற்க்கு முன்பாக நடிகை ரம்யாபாண்டியன் நடித்த 'ராமே ஆண்டாலும், ராவணே ஆண்டாலும்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் மூலம் தான் நடிகை ரம்யாபாண்டியனுக்கு மம்மூட்டியுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.