பொழுதுபோக்கு

சிவகாா்த்திகேயன் - ஞானவேல் ராஜா இடையே சமரசம்

Malaimurasu Seithigal TV

சம்பள பாக்கி தொடர்பான வழக்கில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “மிஸ்டர் லோக்கல்” படத்தை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளாா்.

ஆனால் குறிப்பிட்ட தொகையை வழங்காமல் 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சிவகாா்த்திகேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து சமரச மனு அளிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து இருதரப்பினா் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.